ரூ. 9.14 லட்சம் விலையில் mHAWK100 என்ஜினுடன் வெளியிடப்பட்டது மகிந்திரா TUV300

மகிந்திரா நிறுவனம் ரூ. 9.14 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் mHAWK100 என்ஜினுடன் TUV300 மாடலை வெளியிட்டுள்ளது. இந்த என்ஜின் T8 வேரியண்டில் மட்டும் கிடைக்கும். T8 வேரியண்டின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 100bhp மற்றும் 84bhp என இரண்டு திறன்களிலும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 100 Bhp  திறனுடனும்  மட்டும் கிடைக்கும்.

இந்த மாடலில் பழைய 1.5 லிட்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் 16 Bhp  திறன் அதிகமாக தருமாறு டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த mHAWK100 என்ஜின் 100 Bhp  திறனையும் 240 Nm  இழுவைதிறனையும் வழங்கும். 

TUV300 மாடல் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வந்தாலும் திறன் சற்று குறைவாக உள்ளதாக பரவலான கருத்து உள்ளது. அதனாலேயே இந்த மாடல் அதிக திறனுடன் வெளியிடப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:

T8 mHAWK100 - Rs. 914253
T8AMT mHAWK100 - Rs. 989087

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.