அதிக திறன் கொண்ட என்ஜினுடன் வெளியிடப்படுமா மகிந்திரா TUV300?

மகிந்திரா நிறுவனம் mHawk100 எஞ்சினுடன்  TUV300 மாடலை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. TUV300 மாடல் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வந்தாலும் திறன் சற்று குறைவாக உள்ளதாக பரவலான கருத்து உள்ளது. 

இந்த மாடல் தற்போது 3 சிலிண்டெர் கொண்ட 1.5 லிட்டர் mHawk80 என்ஜினில் கிடைக்கிறது. இது 84 Bhp  திறனையும் 230 Nm  இழுவைதிறனையும் வழங்கும். தற்போது இதே என்ஜினுடன் வெளியிடப்பட்ட நுவோஸ்போர்ட் மாடல் 100 Bhp  திறனையும் 240 Nm  இழுவைதிறனையும் வழங்கும் அளவு டியூன் செய்யப்பட்டுள்ளது.  

எனவே இந்த புதிய mHawk100 என்ஜினுடன் TUV300 மாடல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய என்ஜினில் மைலேஜ் சற்று குறைவாக இருக்கும். ஆனால் அது குறைகூறும் அளவு இருக்காது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.