ஜூலை 31 அன்று புதிய U321 MPV காரின் பெயரை வெளியிடும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் U321 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்படும் ஒரு புத்தம் புதிய MPV காரை சோதனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் நிறைய இணையத்தில் வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாடலின் பெயர் நாளை அறிவிக்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த மாடல் மூன்று வரிசை இருக்கையை கொண்ட ஒரு பெரிய MPV  போல தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் முழுவதும் மூடப்பட்டிருந்ததால் தெளிவான வடிவமைப்பு தெரியவில்லை. இந்த புதிய மாடல் டொயோடா இன்னோவா மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ போன்ற மாடல்களில் உள்ள 2.2 லிட்டர் மற்றும் 1.99 லிட்டர் டீல் என்ஜினிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலின் பெயர் மராஸோ என ஒரு செய்தி இணையத்தில் உலா வருவதும் குறிப்பிடத்தக்கது. எனினும், நாளை இந்த மாடலின் பெயர் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும், மேலும் இந்த மாடல் தொடர்பான சில விவரங்களையும் நாளை எதிர்பார்க்கலாம். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.