மகிந்திரா XUV 100 மாடலின் விளம்பர படப்பிடிப்பு தொடங்கப்பட்டது: விரைவில் வெளியிடப்படும்

XUV 100 மாடலின் விளம்பர படப்பிடிப்பை நடத்தி வருகிறது மகிந்திரா நிறுவனம். அதனால்  XUV 100 மாடல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் விளம்பர படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட சில படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த படங்களில் முன்புறம் தெளிவாக தெரியவில்லை பக்கவாட்டுப்பகுதியும் பின்புறமும் மட்டுமே தெரிகிறது. பின்புற கதவுக்கான கைப்பிடிகள் செவ்ரொலெட் பீட் மாடலில் உள்ளது போல் கண்ணாடியில் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் TUV 300 மாடலில் உள்ள 1.5 லிட்டர் mHawk  டீசல் எனிஜின்களில் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 75 Bhp திறனையும் 110 Nm இழுவைதிறனையும் வழங்கும். 1.5 லிட்டர் mHawk  டீசல் எஞ்சினின் திறன் TUV 300 மாடலில் உள்ளது போல் allaamal இந்த மாடலுக்கு ஏற்றவாறு சற்று மாற்றப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள். 

நன்றி: Indianautoblogs.com

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.