ரூ.15.65 லட்சம் ஆரம்ப விலையில் மகிந்திரா - XUV 500 ஆட்டோமேடிக் மாடல் வெளியிடப்பட்டது

மகிந்திரா ஸ்கார்பியோ மற்றும் TUV300 மாடல்களின் வெற்றியை தொடர்ந்தும் ஹுண்டாய் க்ரெடா மாடலின் போட்டியை சமாளிக்கவும்  XUV 500 ஆட்டோமேடிக் மாடலை மகிந்திரா நிறுவனம் ரூ.15.65 லட்சம் சென்னை ஷோரூம்  ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. 

மகிந்திரா ஸ்கார்பியோ ஆட்டோமேடிக்  மாடலில் உள்ள அதே 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அதே 2.2 லிட்டர் mHawk என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த  என்ஜின்  140bhp (3750 rpm) திறனும்  330Nm (1600-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

மேலும் இதன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இரண்டு மற்றும் நான்கு வீல் டிரைவ் என இரண்டு சிஸ்டத்திலும் கிடைக்கும். இதன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் W8, W10 மற்றும் W10 AWD என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும்.
வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை 

மகிந்திரா - XUV 500 - W8 FWD AT - ரூ.1564860

மகிந்திரா - XUV 500 - W10 FWD AT - ரூ.1649843

மகிந்திரா - XUV 500 - W10 AWD AT - ரூ.1755961

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.