புதிதாக W6 வேரியன்டிலும் வெளியிடப்பட்டது மகிந்திரா XUV500 ஆட்டோமேடிக்

ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட மகிந்திரா XUV500 மாடல் புதிதாக W6 வேரியன்டிலும் ரூ.14.29 லட்சம் மும்பை ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  முன்னர் W8 மற்றும் W10 வேரியண்டில் மட்டுமே ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் வெளியிடப்பட்டது. தற்போது W6FWD, W8FWD, W10FWD மற்றும் W10AWD என நான்கு வேரியண்டுகளில் கிடைக்கும். 

இந்த மாடலில்  2179 cc  கொள்ளளவு கொண்ட 2.2 லிட்டர் mHawk என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த  என்ஜின்  140bhp (3750 rpm) திறனும்  330Nm (1600-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.  இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த  மாடல் 15.1kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 5.4 வினாடிகளிலும்  100 கிலோமீட்டர் வேகத்தை 12.5 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  175 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.