ரூ 15.46 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மஹிந்திரா XUV500 பெட்ரோல்

மஹிந்திரா நிறுவனம் புதிய பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய XUV500 மாடலை ரூ 15.46 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் வெளியிடப்பட்டு தோராயமாக ஆறு வருடங்களுக்கு பிறகு பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய மாடலை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பெட்ரோல் எஞ்சினுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் மஹிந்திரா நிறுவனம் பெட்ரோல் மாடலை வெளியிட்டுள்ளது.

இந்த மாடலில் டீசல் மாடல் போலவே 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 140Bhp திறனையும் 320Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் செயல்திறனும் டீசல் மாடல் அளவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மாடல் 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும்.  மேலும் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய XUV500 மாடல் G AT எனும் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மாடலில் நிறுத்தப்பட்ட W8 எனும் வேரியன்ட்டின் அடிப்பைடையில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.