விற்பனையில் 1.5 லட்சம் மைல்கல்லை கடந்தது மகிந்திரா XUV 500

2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட XUV 500 மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை இந்தியா மற்றும் ஏற்றுமதி என அனைத்தும் சேர்த்து 1.5 லட்சம் XUV 500 கார்களை விற்றுள்ளது மகிந்திரா  நிறுவனம். 

இந்த மாடல் முழுவது சென்னையில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் முழுவதுமாக வடிவமைக்கப்பட்டது. இந்த மாடல் சிறுத்தையின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது அதனால் தான் மகிந்திரா நிறுவனம் இந்த மாடலை cheetah என்ற செல்லப் பெயரால் அழைக்கின்றனர்.

இந்த மாடல் மொத்தம் 4 வேரியண்டுகள் மற்றும் நீலம், கருப்பு, வெள்ளை, சில்வர், சிவப்பு, பர்பிள், கிரே   உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது . டீசல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. 
தற்போது கிடைக்கும் SUV  மாடல்களில் சிறந்த வெளிப்புற தோற்றமும் செயல்திறனும் கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த மாடல் மகிந்திராவின் அதிக விலை கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 2.2 லிட்டர் என்ஜின்  mHawk பொருத்தப்பட்டுள்ளது. இந்த  என்ஜின்  140bhp (3750 rpm) திறனும்  330Nm (1600-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த  மாடல் 15.1kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.