புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது ஃபோர்டு மற்றும் மஹிந்திரா

ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் மேலும் சில புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் இந்த கூட்டமைப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் புதிய வளர்ச்சியை உருவாக்கவும் இந்த கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது:

கனக்ட்டேட் வெஹிகிள் ப்ராஜெக்ட்

எலெக்ட்ரிக் வெஹிகிள் 

சோர்சிங் மற்றும் கமெர்சியல் திறன் 

ப்ராடக்ட் டெவெலப்மென்ட் மற்றும் மேலும் பல 

இந்த கூட்டமைப்பு முதல் மூன்று வருடங்களுக்கு சோதனை செய்த பிறகு இதை தொடர்வதா இல்லையா என்பது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபோர்டு நிறுவனத்தின் வளர்ச்சியை இந்தியாவில் அதிகரிக்கவும் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் வளர்ச்சியை இந்தியாவிற்கு வெளியே அதிகரிக்கவும் இந்த கூட்டமைப்பு துணைபுரியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.