நாடு முழுவதும் M-பிளஸ் எனும் இலவச சர்விஸ் முகாமை நடத்தும் மகிந்திரா

மகிந்திரா நிறுவனம் M-பிளஸ் எனும் இலவச சர்விஸ் முகாமை நாடு முழுவதும்  மார்ச் 7 முதல் 13 ஆம் தேதி வரை நடத்துகிறது. இந்த முகாம் நாடு முழுவதும் உள்ள 450 க்கும் மேற்பட்ட சர்விஸ் சென்டர்களில் நடைபெறும். 

இந்த முகாமில் KUV100 முதல் XUV500 வரை அனைத்து விதமான பயணிகள் வாகனங்களையும் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த முகாமில் 75 விதமான பிரச்சினைகள் சோதனை செய்யப்படும். மேலும் உதிரி பாகங்களின் மீதும் தொழிலாளர் கட்டணம் மீதும் சலுகைகளை வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பல சிறப்பு பரிசுகளும் உண்டு. 

அருகில் உள்ள சர்விஸ் மையங்களையோ அல்லது இந்த இலவச எண்ணை -1800-209-6006 தொடர்பு கொண்டோ மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.