வருட இறுதிக்குள் பெட்ரோல் மாடல்களை வெளியிடும் மகிந்திரா

மகிந்திரா நிறுவனம் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல்களை இந்த வருட இறுதிக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து பல நகரங்களில்  2 லிட்டர் மற்றும் அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின்  கார்களை பதிவு செய்ய தடை விதித்து வருகிறது. இதனால் மகிந்திரா போன்ற நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வருட தொடக்கத்தில் டெல்லியிலும் சில நாட்களுக்கு முன்பு கேரளாவிலும் 2 லிட்டர் மற்றும் அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின்  கார்களை பதிவு செய்ய தடை விதித்து. அது மட்டுமல்லாமல் மேலும் சில நகரங்களிலும் தடை விதிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை 2.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் TUV300 மற்றும் நுவோஸ்போர்ட்  மாடல்களை 1.6 லிட்டர் என்ஜினிலும் வெளியிட திட்டமிடிருப்பதாக தெரிகிறது. மகிந்திரா நிறுவனம் 1.99 லிட்டர் டீசல் என்ஜினை  கொண்ட ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை டெல்லியில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.