பிரச்சினைகளை கண்டறிய புதிய ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பை வெளியிட்டுள்ளது மகிந்திரா

மகிந்திரா நிறுவனம் டீலர்களுக்கான பிரத்தியேகமான பிரச்சினைகளை கண்டறியும் miniSMART எனும் புதிய ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பை வெளியிட்டுள்ளது. இந்த  ஆப்பை அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இந்த ஆப் மூலம் வாகனங்களின் பிரச்சினைகளை எளிதாக கண்டறிய முடியும் எனவும் பழைய மற்றும் பெரிய சிஸ்டம் ஏதும் தேவையில்லை எனவும் மகிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப் மூலம் செலவீனம் குறைவது மட்டும் இல்லாமல் எளிதாகவும்   பிரச்சினைகளை கண்டறிய முடியும்.

வைர்லெஸ் இல்லாத வாகனத்தை கூட க்லவ்ட் முறையில் இணைத்து சரி செய்ய முடியும். இதன் மூலம் பிரச்சனைகளை கண்டறிவது எளிதாகும் என மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.