பெட்ரோல் என்ஜின் கொண்ட ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை வெளியிட திட்டமிடும் மகிந்திரா

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் 2 லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் கார்களுக்கு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கு டெல்லியில் தடை விதித்தது. இதனால் மகிந்திராவின் விற்பனை 2 சதவீதம் வரை பாதிக்கப்படும் என ஏற்கனவே மகிந்திரா நிறுவனம் தெரிவித்திருந்தது. எனவே விற்பனையை சரி செய்ய பெட்ரோல் என்ஜின் கொண்ட ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

மகிந்திரா நிறுவனம் ஏற்கனவே பெட்ரோல் என்ஜினில் எதிர்காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. மேலும் சில நாட்களுக்கு முன்பு தான் mFALCON எனும் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை KUV 100 மாடலுடன் அறிமுகப்படுத்தியது. எனவே விரைவில் மகிந்திராவின் பெட்ரோல் என்ஜின் மாடல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.