ஸ்கார்பியோ மற்றும் நுவோஸ்போர்ட் கார்களை திரும்ப அழைக்கும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் பியூவல் ஹோஸில் உள்ள பிரச்னை காரணமாக புதிய தலைமுறை  ஸ்கார்பியோ மற்றும் நுவோஸ்போர்ட் கார்களை திரும்ப அழைத்துள்ளது. மொத்தம் எதனை வாகனங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அனால் 2016 ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட அணைத்து வாகனங்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மஹிந்திரா நிறுவனமே நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறது.  புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும் நுவோஸ்போர்ட் மாடல் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மற்றும் பிரச்னை இல்லாத சேவையை வழங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.