XUV ஏரோ எனும் புதிய SUV கூப் மாடலின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது மகிந்திரா

மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது XUV ஏரோ எனும் புதிய SUV கூப் மாடலின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது மகிந்திரா. இது XUV 500 மாடலின் அடிப்படியில் SUV மற்றும் கூப் என இரண்டு வடிவங்களையும் கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தில் முன்புறம் மற்றும் பக்கவாட்டில் அதிக மாற்றங்கள் தெரியவில்லை. பின்புறம் மட்டும் கூப் மாடல் போன்று சரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு கோடுகள் நேராக இருப்பது போல் தெரிகிறது ஆனால் தயாரிப்பு நிலை மாடலில் தற்போது உள்ள XUV 500 மாடலில் இருப்பது போன்று தான் இருக்கும். பின்புறம் கம்பீரமான தோற்றத்தையும் விலையுயர்ந்த கார் போலவும் தோற்றமளிக்கிறது. 

இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சின் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை பெரும்பாலும் XUV 500 மாடலில் உள்ள அதே 2.2 லிட்டர் எஞ்சின் தான் இதிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.