விற்பனையில் 5 லட்சம் மைல்கல்லை எட்டியது மகிந்திரா - ஸ்கார்பியோ

எத்தனை புதிய SUV மாடல்கள் வந்தாலும் SUV சந்தையில் அசைக்க முடியாத நிறுவனம் நாங்கள் தான் என்று மறுபடியும் நிருபித்துள்ளது மகிந்திரா. இதுவரை 5 லட்சம் ஸ்கார்பியோ மாடல்களை மகிந்திரா நிறுவனம் விற்றுள்ளது. எத்தனை மாடல்கள் வந்தாலும் ஸ்கார்பியோ மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இந்த மாடல் வெளியிடப்பட்டு 13 வருடங்கள் ஆகியும் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்த மாடல் 2002 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ  மற்றும் சிவப்பு ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது. மேலும் இந்த மாடல் 2.5 லிட்டர்  மற்றும் 2.2 லிட்டர் mHawk என இரண்டு வித என்ஜின்களில் கிடைக்கும். 2.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 75 bhp (3200 rpm) திறனும் 200Nm (1400-2200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் மாடல் 120 bhp (4000 rpm) திறனும் 280Nm (1800-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

மேலும் இந்த மாடல் ஆல் வில் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் சிஸ்டத்திலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.