ஜூன் 2 ஆம் தேதி வெளியிடப்படும் மகிந்திரா எலெக்ட்ரிக் வெரிட்டோ

இந்தியாவின் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் தாரிப்ப்பு நிறுவனமான மகிந்திரா எலெக்ட்ரிக் வெரிட்டோ மாடலை ஜூன் 2 ஆம் தேதி வெளியிட உள்ளது. இது மகிந்த்ராவின்  இரண்டாவது முழுமையான எலெக்ட்ரிக் மாடல் ஆகும். ஏற்கனவே e2o எனும் எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடல் அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால்100 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.  

இந்த மாடலில் 72V எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 41ps திறனையும் 91 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த எலெக்ட்ரிக் வெரிட்டோ   மாடல் டீசல் மாடலை விட விலை அதிகம் கொண்டதாக இருக்கும்  தோராயமாக ரூ.8 முதல் 9 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.