2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் மகிந்திரா எலெக்ட்ரிக் வேரிடோ

டெல்லியில் 2 லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மகிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வேரிடோ  மாடலை 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் எலெக்ட்ரிக் மேக்சிமோ ட்ரக்கும் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடல் அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். மேலும் இந்த எலெக்ட்ரிக் வேரிடோ  மாடல் டீசல் மாடலை விட விலை அதிகம் கொண்டதாக இருக்கும். 

மகிந்திரா நிறுவனம் டாட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனத்துடன் சேர்ந்து எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் பொதுவான பாகங்களை தயாரிக்க திட்டமிட்டுருப்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.