மாருதி சுசுகி பலெனோ முன்பதிவு தொடங்கப்பட்டது: மேலும் விரைவில் நெக்ஸா இணையத்தில்

மாருதி சுசுகி பலெனோ மாடலின் முன்பதிவை தொடங்கியது மாருதி சுசுகி நிறுவனம். ரூபாய் 25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த மாடலின் விவரங்கள் விரைவில் நெக்ஸா இணையத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகபடுத்தப்பட்ட YRA கான்செப்ட் மாடலின் பெயரை பலெனோ என்று சில நாட்களுக்கு முன் தான்  மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்தது. மேலும் இந்த மாடலை  ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கும் வைத்திருந்தது.  மேலும்  இந்த மாடல் அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் ஸ்விப்ட் மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்படும். மேலும் இந்த மாடல் ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகையை சேர்ந்தது.  இந்த மாடல் ஹுண்டாய் - எலைட் i 20 மற்றும் ஹோண்டா - ஜாஸ் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இந்த மாடல் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் பூஸ்டர் ஜெட் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் டியூவல் ஜெட் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் சியாஸ் மாடலில் உள்ள என்ஜினில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் 6 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.