ஐரோப்பாவில் வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி S-கிராஸ்

மேம்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி S-கிராஸ் மாடல் சில நாட்களாகவே ஐரோப்பிய நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஹங்கேரி நாட்டில் ஒரு நிகழ்ச்சியில் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதிகாரப்பூர்வமாக விளம்பரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த வருட இறுதிக்குள் ஐரோப்பாவில் வெளியிடப்படும் பிறகு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலில் வெளிப்புற தோற்றத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக முன்புற க்ரில் அமைப்பு முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய க்ரில் அமைப்பு  பார்ப்பதற்கு சற்று கம்பீரமான தோற்றத்தை தருகிறது. உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஐரோப்பாவில் 1.4 லிட்டர் பூஸ்டர் ஜெட் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் மாட்டி ஜெட் டீசல் என்ஜினில் கிடைக்கும். 

ஆனால் இந்தியாவில் இந்த மாடல் அதே 1.3 மற்றும் 1.6 லிட்டர் மாட்டி ஜெட் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஐரோப்பாவில் நான்கு வீல் ட்ரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.