வெளியிடப்பட்டது மாருதி சுசூகி ஆல்டோ 800 உட்சவ் எடிசன்

மாருதி சுசூகி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆல்டோ 800 உட்சவ் எடிசன் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் VXi (O) வேரியன்ட்டின்  அடிப்படையில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ரூ 3.94 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இது சாதாரண மாடலை விட ரூ 20,000 அதிக விலை கொண்டது குறிப்பிடத்தக்கது. 

உட்சவ் எடிசன் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள்:

  • புதிய பாடி கிராபிக்ஸ்
  • பக்கவாட்டு கண்ணாடி கவர்
  • பின்புற பார்க்கிங் சென்சார் 
  • முன்புற மற்றும் பின்புற விளக்குகளில் கொடுக்கப்பட்டுள்ள புதிய குரோம் ஸ்ட்ரைப் 
  • சிவப்பு நிற அலங்காரத்துடன் கூடிய புதிய கருப்பு நிற உட்புறம்

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 0.8 லிட்டர் எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த என்ஜின்  47.3  bhp (6000 rpm) திறனும்  69Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 24.7 மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. இந்த மாடல் ஹூண்டாய் இயான் மற்றும் ரெனோ க்விட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.