ரூ. 2.61 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி ஆல்டோ 800

மாருதி சுசுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ 800 மாடலை ரூ.  2.61 லட்சம் சென்னை ஷோ ரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. ஆல்டோ 800 இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற கார்களில் ஒன்று. விற்பனையில் இருந்த ஆல்டோ 800 மாடல் 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மாருதி சுசுகி நிறுவனம் சிறிய மாற்றங்களை மட்டுமே செய்து மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிட்டுள்ளது.

முன்புற கிரில் அமைப்பு மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது மற்றபடி பின்புறமும் பக்கவாட்டிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உட்புற இருக்கை அமைப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பழைய மாடலை விட 35 மில்லி மீட்டர் அதிக நீளம் கொண்டது. 

அதே 799 cc கொள்ளளவு கொண்ட 0.8 லிட்டர் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 47.3  bhp (6000 rpm) திறனும்  69Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. ஆனால் இந்த மாடலின் ARAI  மைலேஜ்  24.7 Kmpl  என அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றுப்பை ஆப்சனாக அனைத்து வேரியண்டுகளிலும் கிடைக்கும். கூடுதலாக பச்சை மற்றும் ப்ளூ வண்ணங்களிலும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.