இந்தியாவில் 35 லட்சம் விற்பனையை கடந்தது மாருதி சுசூகி ஆல்டோ

மாருதி சுசூகி நிறுவனம் இதுவரை 35 லட்சம் மாடல்களை ஆல்டோ பிராண்டில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 14 வருடங்களாக இந்தியாவில் அதிகமான விற்பனையை பதிவு செய்யும் மாடல் ஆல்டோ தான் என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி நிறுவனம் 2008 ஆம் ஆண்டு வரை 10 லட்சம் மாடல்களை விற்பனை செய்திருந்தது, அதற்கடுத்து ஓவ்வொரு வருடமும் தோராயமாக 2.5 லட்சம் மாடல்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 0.8 லிட்டர் என்ஜின்  47.3  bhp (6000 rpm) திறனும்  69Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் 1.0 லிட்டர் என்ஜின்  67.1 bhp (6000 rpm) திறனும்  90Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இதன் 1.0 லிட்டர் என்ஜின் மாடல் AMT ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும். 2017 - 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனையான மொத்த மாடல்களில் 33 சதவீதம் இந்த மாடல் தான் விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.