மாருதி 800 மாடலின் விற்பனையை விஞ்சியது மாருதி சுசுகி ஆல்டோ

இதுவரை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக மாருதி 800 மாடல் இருந்தது. இந்த மாடல் தோராயமாக 28 லட்சம் எண்ணிக்கையில் இதுவரை விற்பனை ஆகியுள்ளது. மாருதி 800 மாடல் 1983 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உற்பத்தி 2014 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. எனினும் இதன் விற்பனை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாருதி சுசுகி ஆல்டோ மாடல்  விற்பனையில் 29,19,819 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. இதன் மூலம் மாருதி 800 மாடலின் விற்பனையை விஞ்சியது மாருதி சுசுகி ஆல்டோ. மாருதி 800 மாடல் 28 ஆண்டுகளில் செய்த சாதனையை மாருதி சுசுகி ஆல்டோ மாடல் 15 ஆண்டுகளில் செய்துள்ளது. 

மாருதி சுசுகி ஆல்டோ மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களில் கிடைக்கும். தற்போதும் இந்த மாடல் விற்பனை செய்யப்படுவதால் மாருதி சுசுகி ஆல்டோ மாடல் விற்பனையில் மேலும் பல சாதனைகளை புரிய வாய்ப்புள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.