ரூ. 8.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மாருதி சுசுகி பலேனோ RS

மாருதி சுசூகி நிறுவனம் பலேனோ RS மாடலை ரூ. 8.95 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஆல்பா வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மாருதி சுசுகி  நிறுவனம் பலேனோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பலேனோ RS மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில்  வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் குறிப்பாக எஞ்சினிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் ஸ்போர்டியாக சில பிளாஸ்டிக் கிலாடிங்குகள், அனைத்து வீலுக்கும் டிஸ்க் பிரேக் மற்றும் புதிய அலாய் வீல் ஆகியவையும் உட்புறத்தில் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 998 cc கொள்ளளவு கொண்ட 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 102 Bhp @ 5,500rpm திறனையும் 150 Nm @ 1,700-4,500rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் வோல்க்ஸ்வேகன் போலோ GT மற்றும் அபார்த் புன்டோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.