1 லட்சம் முன்பதிவுகளை கடந்தது மாருதி சுசுகி பலெனோ

மாருதி சுசுகி நிறுவனத்தின் பலெனோ  ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல் 1 லட்சம் முன்பதிவுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த மாடல் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு 5 மாதங்களுக்குள் இந்த மாடல் இந்த சாதனையை படைத்துள்ளது. சிறந்த வடிவமைப்பு, சரியான விலை, சிறந்த மைலேஜ் மற்றும் மாருதியின் வாடிக்கையாளர் சேவை போன்ற காரணங்களால் இந்த மாடல் போட்டியாளர்களை வீழ்த்தி மிக குறுகிய காலத்தில் இந்த சாதனையை படைத்துள்ளது.

இந்த மாடல்  1.2 லிட்டர்  K-சீரீஸ்   பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் DDiS190  டீசல் என்ஜினிலும் கிடைக்கும் . இது ஸ்விப்ட் டிசைர் மற்றும் ஸ்விப்ட் மாடல்களில் உள்ள அதே என்ஜின் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்   பெட்ரோல் என்ஜின்  1197cc கொள்ளளவும்   மற்றும்  டீசல் என்ஜின்  1248cc கொள்ளளவும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp (6000 rpm) திறனும்  115Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடலின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் இரண்டுமே  21.4 மைலேஜ்   தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன்  டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  மாடல் 27.39kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது .   மேலும் இந்த மாடல் சிவப்பு, அர்பன் ப்ளூ,  ரே ப்ளூ, வெள்ளை, சில்வர், கிரே, ஆரஞ்சு ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடலின் அணைத்து தொழில் நுட்ப விவரங்கள், வேரியன்ட் விவரங்கள், ஷோ ரூம் மற்றும் ஆன் ரோடு விலை ஆகியவற்றை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
 

http://www.mowval.com/car-overview.php?car_company=11&car_model=117

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.