ரூ.20,000 வரை விலை உயருகிறது மாருதி சுசூகி நிறுவன கார்கள்

மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி செலவீனம் மற்றும் அந்நிய செலவாணி மதிப்பு மாற்றத்தினாலும் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மாருதி நிறுவனம் தனது அனைத்து கார்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. ஆல்டோ மற்றும் வேகன் R போன்ற சிறிய கார்களின் விலை ரூ.5000 வரையும், விட்டாரா பிரீஸாவின் விலை ரூ.20,000 வரையும் மற்றும் பலேனோ மாடலின் விலை ரூ.10,000 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இரும்பு மற்றும் ரப்பர் போன்ற மூலப் பொருள்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவீனம் மற்றும் அந்நிய செலவாணி மதிப்பு போன்ற பல காரணங்களால் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களும் விரைவில் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.