ரூ 4.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசூகி செலிரியோ

மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட செலிரியோ மாடலை ரூ 4.15 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிட்டுள்ளது மாருதி. சில நாட்களுக்கு முன்பு செலிரியோ X கிராஸ் ஓவர் மாடலின் விவரங்கள் கசிந்தது. எனவே மாருதி நிறுவனம் இந்த மாடலை தான் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாருதி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட மாடலின் வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல் :

 • Lxi MT - ரூ 4,15,273
 • Lxi (O) MT - ரூ 4,29,289
 • Vxi MT - ரூ 4,48,418
 • Vxi (O) MT - ரூ 4,63,908
 • Zxi MT - ரூ 4,73,934
 • Vxi AGS - ரூ 4,91,418
 • Vxi (O) AGS - ரூ 5,06,908
 • Zxi AGS - ரூ 5,16,934
 • Zxi (O) MT - ரூ 5,22,043
 • Zxi (O) AGS - ரூ 5,34,043

CNG:

 • Vxi MT - ரூ 5,10,438
 • Vxi (O) MT - ரூ 5,25,577

மேம்படுத்தப்பட்ட மாடலில் கொடுக்கப்பட்டுள்ள மாறுதல்கள்:

 • புதிய கிரில் மெஸ் 
 • பனி விளக்கு கொடுக்கப்பட்டுள்ள இடம் 
 • புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் 
 • புதிய கருப்பு மற்றும் பீஜ் வண்ண கலவையிலான உட்புறம் 
 • புதிய காற்றுப்பை மற்றும் ABS 
 • சீட் பெல்ட் ரீமைண்டர் 
 • உயரம் மாற்றக்கூடிய ஓட்டுநர் இருக்கை

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த எஞ்சின் 68 bhp (6200 rpm) திறனும்  90Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் CNG ஆப்ஷனிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.