மாருதி சுசுகி - சியாஸ் ஹைப்ரிட் மாடல் 8.66 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது

மாருதி சுசுகி - சியாஸ்  ஹைப்ரிட் மாடல் 8.7 லட்சம் விலையில் இன்று வெளியிடப்பட்டது. சியாஸ் மாடல் தான் இந்த செக்மெண்டில் கிடைக்கும் ஒரே ஒரு ஹைப்ரிட் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஹைப்ரிட் மாடலில் 1.3 லிட்டர் மல்டி ஜெட் என்ஜினுடன்  SHVS (Smart Hybrid Vehicle by Suzuki) எனும் தொழில்நுட்பம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு மின் மோட்டாரும் அதிக சக்தி வாய்ந்த ஒரு பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ரீஜெனரேடிவ்  ப்ரேகிங் மூலம் சார்ஜ் செய்துகொள்ளும். மேலும் இந்த தொழில்நுட்பம் என்ஜின் ஸ்டார்ட் செய்யும் போது கூடுதல் திறனையும்  ஐடிலிங்க் கண்டிசனில் இருக்கும் போது என்ஜினை ஆன்/ஆப் செய்தும்  செயல்திறனை அதிகரிக்க உதவி புரியும்.  

இதன் என்ஜின்  91bhp திறனையும்  200Nm  டார்க் எனும்  இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 28.09 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள கார்களில் இது தான் அதிக மைலேஜ்  தரும் கார் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசுகி - சியாஸ்  ஹைப்ரிட் மாடலின் விலை விவரம்.

சியாஸ்  ஹைப்ரிட்- VDI - ரூ. 8.66 லட்சம் 

சியாஸ்  ஹைப்ரிட்-VDI (O) - ரூ. 8.81 லட்சம்

சியாஸ்  ஹைப்ரிட்-VDI+ - ரூ. 9.25 லட்சம்

சியாஸ்  ஹைப்ரிட்-ZDI - ரூ. 9.77 லட்சம்

சியாஸ்  ஹைப்ரிட்-ZDI+ - ரூ. 10.64 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.