மாருதி சுசுகி - சியாஸ் மாடலின் RS வேரியன்ட் வெளியிடப்பட்டது

மாருதி சுசுகி  நிறுவனம் சியாஸ் மாடலின் RS வேரியண்டின் பெட்ரோல் மாடல் 9.2 லட்சம் மற்றும் டீசல் மாடல் 10.28 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த RS வேரியன்ட் ZXi+ மற்றும்  ZDi+ வேரியண்டின் அடிப்படையில் மாற்றப்பட்டது.

உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிப்புறத்தில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஸ்போர்டியான பம்பர்கள், பக்கவாட்டில் புதிய பிளாஸ்டிக் கிலாடிங்குகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 1.4 லிட்டர்  K14B VVT  பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS200  SHVS (Smart Hybrid Vehicle by Suzuki)  டீசல் என்ஜினிலும் கிடைக்கும்.

இதன் பெட்ரோல் என்ஜின்  92bhp  திறனும் 130Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் மாடலின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் 20.73 மைலேஜும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்  19.12 மைலேஜும்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இதன்  டீசல்  என்ஜின்  91bhp  திறனும் 200Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  மாடல்  28.09 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.