ஐந்து மாதத்தில் ஒரு லட்சம் விற்பனையை கடந்தது மாருதி சுசூகி டிசைர்

மாருதி சுசூகி நிறுவனம் மூன்றாம் தலைமுறை டிசைர் மாடலை கடந்த மே மாதம் வெளியிட்டது. வெளியிடப்பட்டு ஐந்தே மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாடல்கள் விறபனையாகி சாதனை படைத்துள்ளது. புதுமையான டிசைன் மற்றும் மருதியில் விற்பனைக்கு பிந்தைய சேவை போன்றவற்றால் இந்த மாடல் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

இந்த மாடல் முற்றிலும் புதிய ஹார்ட்டெக் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்போர்மில் தான் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலும் பலேனோ மாடலும் தயாரிக்கப்படுகிறது. முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் என முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது.  உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடலில் புதிய அடிப்புறம் தட்டையான ஸ்டேரிங் வீல் மற்றும் பின்புற AC வென்ட் ஆகியவை புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு முந்தய மாடல் போல் தோற்றமளித்தாலும் இந்த மாடலும் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முந்தய மாடலை விட 40  மில்லி மீட்டர்  அதிக அகலமும் 40  மில்லி மீட்டர்  குறைவான உயரமும் கொண்டது. அதேபோல் பெட்ரோல் மாடல் 85 கிலோவும் டீசல் மாடல் 105 கிலோவும் குறைந்த எடை கொண்டது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  83bhp (6000 rpm) திறனும்  113Nm (4200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இரண்டு மாடலும் ஐந்துஸ்பீடு மேனுவல் மற்றும் ஐந்து ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இதன் பெட்ரோல் மாடல் 22.0kmpl மைலேஜும் டீசல் மாடல் 28.4kmpl மைலேஜும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.