சூப்பர் கேரி மாடல் மூலம் LCV செக்மென்ட்டில் நுழைந்தது மாருதி சுசூகி

மாருதி சுசூகி நிறுவனம் சூப்பர் கேரி எனும் கார்கோ மாடலை ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட உள்ளது. இதன் மூலம் நாட்டின் மிகப்பிரிய பயணிகள் கார் நிறுவனமான மாருதி சுசூகி  LCV  செக்மென்ட்டில் நுழைகிறது. முதல் கட்டமாக இந்த மாடல் கொல்கத்தா மற்றும் அஹமதாபாத் போன்ற மாநிலங்களில் மட்டும் வெளியிடப்படும்.

இந்த மாடலில் 793 cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 32 Bhp (3500rpm) திறனையும்  75 Nm  (2000rpm)இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 8o கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் லிட்டருக்கு 22.07 கிலோமீட்டர் மைலேஜ் தரும். 

இந்த மாடலில் 740 கிலோ கிராம் வரை எடை உள்ள பொருள்களை ஏற்ற முடியும்.  சிறந்த இட வசதி, சிறந்த பாதுகாப்பு வசதிகள், சிறந்த சொகுசு வசதிகள் என ஏராளமான வசதிகளை இந்த மாடல் கொண்டுள்ளது. விற்பனையில் கார்கள் போல சிறந்த இடத்தை பிடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.