5.99 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி - எர்டிகா

5.99 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி - எர்டிகா மாடல் வெளியிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் மேம்படுத்தப்பட்ட மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேடிக் சிஸ்டமும்  டீசல் மாடலில் ஹைப்ரிட் சிஸ்டமும் கிடைக்கும். 

இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில்  சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நிறைய இடங்களில் குரோம் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 1.4 லிட்டர்  பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின்  95bhp (6000 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இதன்  டீசல்  என்ஜின்  90bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேடிக் சிஸ்டமும்  டீசல் மாடலில் ஹைப்ரிட் சிஸ்டமும் மட்டும் கூடுதலாக கிடைக்கும்.

பெட்ரோல்  வேரியண்டுகள்   
மாருதி சுசுகி - எர்டிகா Lxi- ரூ 5.99 லட்சம்
 மாருதி சுசுகி - எர்டிகா LXi (o)-  ரூ 6.35 லட்சம்
மாருதி சுசுகி - எர்டிகா VXi- ரூ 7.26 லட்சம்
மாருதி சுசுகி - எர்டிகா ZXi- ரூ 7.85 லட்சம் 
மாருதி சுசுகி - எர்டிகா ZXi+- ரூ 8.42 லட்சம்
மாருதி சுசுகி - எர்டிகா VXi AT- ரூ 8.26 லட்சம்

டீசல் வேரியண்டுகள் 
மாருதி சுசுகி - எர்டிகா LDi- ரூ 7.55 லட்சம்
மாருதி சுசுகி - எர்டிகா LDi (o)- ரூ 7.62 லட்சம் 
மாருதி சுசுகி - எர்டிகா VDi- ரூ 8.26 லட்சம்
மாருதி சுசுகி - எர்டிகா ZDi- ரூ 8.82 லட்சம் 
மாருதி சுசுகி - எர்டிகா ZDi+- ரூ 9.25 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.