ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் அக்டோபர் 10 வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி - எர்டிகா

மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி - எர்டிகா மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் அக்டோபர் 10 அன்று  வெளியிடப்படும் என எதிர்பார்கப்படுகிறது. வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நிறைய இடங்களில் குரோம் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்பட்டிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடல் தற்போது 1.4 லிட்டர்  பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின்  95bhp (6000 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இதன்  டீசல்  என்ஜின்  90bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

மேலும் இதன் பெட்ரோல் மாடலில் அல்டோ K10, ஸ்விப்ட் டிசைர் மற்றும் சியாஸ் மாடல்களில் கிடைப்பது போல ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டதிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சியாஸ் மாடலில் இருப்பது போல ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.