ரூ 7.01 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மாருதி சுசூகி இக்னிஸ் ஆல்பா AMT

மாருதி சுஸ்க்கி நிறுவனம் இக்னிஸ் மாடலின் ஆல்பா வேரியண்டில்  AMT ட்ரான்ஸ்மிஷனை வெளியிட்டுள்ளது. இதற்க்கு முன்பு மிட் வேரியண்டில் மட்டுமே AMT டிரான்ஸ்மிஷன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் பெட்ரோல் மாடல் ரூ 7.01 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் டீசல் மாடல்  ரூ 8.08 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை இந்த மாடலில் புதிய AMT டிரான்ஸ்மிஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 1.2 லிட்டர்  K-சீரீஸ்   பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் என்ஜினிலும் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp திறனையும் 113 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 20.89 கிலோமீட்டர் மைலேஜும் டீசல் என்ஜின் மாடல் 26.8 கிலோமீட்டர் மைலேஜும் கொடுக்கும் என ARAI சான்றளிதுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.