ரூ.4.7 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மாருதி சுசூகி இக்னிஸ்

மாருதி சுசூகி நிறுவனம் ரூ.4.7 லட்சம் சென்னை ஷோ ரூம் ஆரம்ப விலையில் இக்னிஸ் மினி SUV மாடலை வெளியிட்டுள்ளது. இது நெக்ஸா ஷோ ரூம் வாயிலாக வெளியிடப்பட்ட மூன்றாவது மாடல் ஆகும். இந்த மாடல் முதலில் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 டீசல் என்ஜின்களில் கிடைக்கும்.  இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp திறனையும் 113 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் கியர் பாக்சிலும் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 20.89 கிலோமீட்டர் மைலேஜும் டீசல் என்ஜின் மாடல் 26.8 கிலோமீட்டர் மைலேஜும் கொடுக்கும்.

இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் டின்சல் ப்ளூ, க்ரே, அர்பன் ப்ளூ, வெள்ளை, சில்வர், சிவப்பு, வெள்ளை & டின்சல் ப்ளூ, கருப்பு & டின்சல் ப்ளூ மற்றும் கருப்பு & சிவப்பு என ஒன்பது வண்ணங்களில் கிடைக்கும். வேரியன்ட் வாரியாக சென்னை ஷோ ரூம் விலை விவரம்.

பெட்ரோல் மாடல்:

சிக்மா பெட்ரோல்  -ரூ.470943
டெல்டா பெட்ரோல் -ரூ.532010
ஸிட்டா பெட்ரோல்  -ரூ.589005
ஆல்பா பெட்ரோல்  -ரூ.684676
டெல்டா AT பெட்ரோல்  -ரூ.587988
ஸிட்டா AT பெட்ரோல்  -ரூ.644983

டீசல் மாடல்:

டெல்டா டீசல்  -ரூ. 653877
ஸிட்டா டீசல்  -ரூ.706802
ஆல்பா டீசல்  -ரூ. 797384
டெல்டா AT டீசல்  -ரூ.709855
ஸிட்டா AT டீசல்  -ரூ.762780

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.