மாருதி சுசுகி நிறுவனம் ஆட்டோமேடிக் டிசைர் மாடலை வெளியிட்டது

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் செடான் மாடலான டிசைர் மாடலின் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை வெளியிட்டுள்ளது மாரிதி சுசுகி நிறுவனம். இது மாருதியின் முதல் டீசல் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல். மேலும் இந்த மாடல் மாருதியின் நான்காவது ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்த ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் ZDi வேரியண்டில் மட்டும் கிடைக்கும். இந்த மாடல் ரூ.8.46 லட்சம் சென்னை ஷோ ரூம் விலையில் கிடைக்கும். தற்போது இந்தியாவில் ஆட்டோ கியர் ஷிப்ட் கொண்ட மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் நெரிசல்களில் ஓட்டுபவர்களுக்கு இந்த ஆட்டோ கியர் ஷிப்ட் மிகவும் எளிதாக இருப்பதால் மக்கள் அதிகம் இந்த மாடல்களை விரும்புகின்றனர். 

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.3 லிட்டர் DDiS  டீசல் என்ஜினில் தான் கிடைக்கிறது. இந்த என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் 26.59kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.