ரூ 4.7 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மாருதி சுசூகி செலிரியோ X

மாருதி சுசூகி நிறுவனம் புத்தம் புதிய செலிரியோ X மாடலை ரூ 4.7 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இது செலிரியோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த புதிய  செலிரியோ X மாடல் சாதாரண மாடலை விட ரூ 8,000 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செலிரியோ மாடலின் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங்குகளை கொடுத்து இந்த மாடலை வடிவமைத்துள்ளது மாருதி சுசூகி நிறுவனம். இந்த மாடலில் முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, கருப்பு நிற B பில்லர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை, செலிரியோ மாடலின் வடிவமைப்பு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆரஞ்சு, வெள்ளை, க்ரே, பிரவுன் மற்றும் ப்ளூ என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த என்ஜின்  68 bhp (6200 rpm) திறனும்  90Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 23.1Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. இந்த மாடல் CNG ஆப்ஷனில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் மொத்தம் எட்டு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:

  • CELERIOX VXI - ரூ 4.7 லட்சம்
  • CELERIOX VXI(O) - ரூ 4.85 லட்சம்
  • CELERIOX ZXI - ரூ 4.95 லட்சம்
  • CELERIOX VXI AGS - ரூ 5.13 லட்சம்
  • CELERIOX VXI(O) AGS - ரூ 5.28 லட்சம்
  • CELERIOX ZXI AGS - ரூ 5.38 லட்சம்
  • CELERIOX ZXI(O) - ரூ 5.44 லட்சம்
  • CELERIOX ZXI(O) AGS - ரூ 5.56 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.