ரூ.5.94 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மாருதி சுசூகி ஸ்விப்ட் டெக்கா சிறப்பு பாதிப்பு மாடல்

மாருதி சுசூகி நிறுவனம் ஸ்விப்ட் மாடலின் டெக்கா எனும் சிறப்பு பாதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த டெக்கா சிறப்பு பாதிப்பு மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் VXi  மற்றும் VDi  வேரியண்டில் கிடைக்கும்.   VXi  பெட்ரோல் என்ஜின் மாடல் ரூ.5.94 லட்சம் விலையிலும்  VDi  டீசல் என்ஜின் மாடல் ரூ.6.86 லட்சம் விலையிலும் (இரண்டும் டெல்லி ஷோரூம் விலை) வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பாதிப்பு மாடல் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும்.

டெக்கா சிறப்பு பாதிப்பு மாடலில் கிடைக்கும் கூடுதல் உபகரணங்கள்:
கோடு போன்ற பாடி கிராபிக்ஸ்,
10 என்ற என் பொரிக்கக்கப்பட்ட கிராபிக்ஸ்,
பாடி ஸ்கிர்ட்ஸ்,
பின்புற ஸ்பாய்லர்,
சோனி டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம்,
பின்புற பார்க்கிங் கேமரா,
பின்புற பார்க்கிங் சென்சார்,
சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையிலான உட்புற வடிவமைப்பு,
முன்புற இருக்கையில் கை வைக்கும் பகுதி,
டோர் சில்ஸ்,
மேட்ஸ்,
ஸ்டீரிங் வீல் கவர் ,
ஆம்பியண்ட் விளக்குகள்.

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர்  K-சீரீஸ்   பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் என்ஜினில் தான் கிடைக்கும்.  இதன் பெட்ரோல் என்ஜின்  84.3bhp (6000 rpm) திறனும்  115Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன்  டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு மாடலிலும் 5 ஸ்பீட் கொண்ட மனுவால் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பாதிப்பு மாடல்  ஏற்கனவே சிறப்பான விற்பனையை பதிவு செய்து வரும் ஸ்விப்ட் மாடலின் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.