மாருதி சுசூகி ஸ்விப்ட் டிசைர் அல்யூர் சிறப்பு பதிப்பு வெளியிடப்பட்டது

மாருதி சுசூகி நிறுவனம் ஸ்விப்ட் டிசைர் மாடலின் அல்யூர் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இது தான் ஸ்விப்ட் டிசைர்  மாடலின் கடைசி சிறப்பு பதிப்பு மாடலாக இருக்கும். ஏனெனில் ஒரு சில மாதங்களில் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் டிசைர் மாடல் வெளியிடப்பட உள்ளது. இந்த அல்யூர் சிறப்பு பதிப்பு மாடல் அனைத்து வண்ணங்களிலும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. 

வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்:

குரோம் வேலைப்பாடுகள் 
பக்கவாட்டு பாடி ஸ்கிர்ட்ஸ் 
அல்யூர் பேட்ச் 
புதிய பாடி கிராபிக்ஸ் 
விண்டோ பிரேம் 

உட்புறத்தில் உள்ள மாற்றங்கள்: 

இரட்டை வண்ண இருக்கை கவர் 
டோர் சில் கார்ட் 
எலெகான்ட் உட்புறம் 
முன்புற இருக்கையில் கை வைக்கும் பகுதி 
ஆம்பியண்ட் லைட்
புதிய மியூசிக் சிஸ்டம் 
தரை விரிப்பு 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.