மாருதி சுசூகி சியாஸ் மாடலின் புதிய ஸ்போர்டியர் வேரியன்ட் வெளியிடப்பட்டது

மாருதி சுசூகி நிறுவனம் சியாஸ் மாடலின் S எனும் புதிய ஸ்போர்டியர் வேரியன்டை வெளியிட்டுள்ளது. இந்த புது வேரியண்ட்டின் பெட்ரோல் மாடல் ரூ 9.39 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையிலும் டீசல் மாடல் ரூ 11.55 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆல்பா வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஆல்பா வேரியன்டை விட ரூ 11,000 அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் கூடுதலாக முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளின் அடிப்பகுதியிலும் பின்புற டிரான்கிலும் ஸ்பாய்லர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில கூடுதல் உபகரணங்களும் சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.4 லிட்டர்  K14B VVT  பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் DDiS200 டீசல் எஞ்சின்களில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  92bhp (6200 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல்  என்ஜின்  89bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் ஐந்து மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.