மார்ச் 21 ஆம் தேதி வெளியிடப்படும் மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV

மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV  மாடலை மார்ச் 21 ஆம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் இதன் முன்பதிவு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாருதி டீலர் ஷிப்புகளில் ரூ.21000 முன்பணமாக கட்டி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடலை வெளியிட்ட பிறகு வாங்கவில்லை என்றால் பணத்தை திரும்ப பெற்றுகொள்ளலாம். இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  நீண்ட நாட்களுக்கு முன்பே இதன் கான்செப்ட் மாடல் வெளியிடப்பட்டது. இந்த மாடல் போர்ட் இகோ ஸ்போர்ட் மற்றும் மகிந்திரா TUV 300 மாடல்களுக்கு  போட்டியாக இருக்கும்.

இந்த மாடல் ஒரு முழுமையான SUV போன்ற தோற்றத்தை தருகிறது.  புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த மாடல் டீசல் என்ஜினில்  மட்டும்  கிடைக்கும். பிறகு பெட்ரோல் என்ஜின் மாடல் வெளியிடப்படும்.

இதில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 89bhp திறனும்  200Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.