ஸ்விப்ட் மற்றும் பலேனோ கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

மாருதி சுசூகி நிறுவனம் மொத்தம் 52,686 ஸ்விப்ட் மற்றும் பலேனோ கார்களை பிரேக் வேக்யூம் ஹோஸில் உள்ள பிரச்னை காரணமாக திரும்ப அழைக்கிறது. இந்த பிரச்னை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை மே 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு பிரச்னை இருந்தால் பிரேக் வேக்யூம் ஹோஸ் மாற்றித்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் இலவசமாக செய்து தரப்படும், 

உங்கள் காரும் இந்த லிஸ்டில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உங்கள் வாகனத்தின் வின் எண்ணை மாருதி நிறுவனத்தின் இணையத்தில் ஒப்பிட்டு பாருங்கள்  அல்லது அருகில் உள்ள ஷோரூமை  தொடர்பு கொள்ளுங்கள். மேலும் மாருதி நிறுவனமும் பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.