செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி S-கிராஸ்

மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட S-கிராஸ் மாடலை தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த மாடல் முதலில் 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாடலில் வெளிப்புற தோற்றத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக முன்புற க்ரில் அமைப்பு முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய க்ரில் அமைப்பு  பார்ப்பதற்கு சற்று கம்பீரமான தோற்றத்தை தருகிறது. உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஐரோப்பாவில் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் மாட்டி ஜெட் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

ஆனால் இந்தியாவில் இந்த மாடல் அதே 1.3 மற்றும் 1.6 லிட்டர் மாட்டி ஜெட் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை முன்பை விட சற்று அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.