2018 வாகன கண்காட்சியில் வெளியிடப்படும் புதிய மாருதி சுசூகி ஸ்விப்ட்: முன்பதிவு ஆரம்பம்

அடுத்த தலைமுறை மாருதி சுசூகி ஸ்விப்ட் மாடலின் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிடப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஜப்பானில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. பலேனோ மற்றும் டிசைர் மாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்மில் தான் இந்த புதிய ஸ்விப்ட் பிராடலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் என முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கதவுக்கான கைப்பிடிகள் விண்ட் சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மாடல் 1.2 லிட்டர் K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சினில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் டீசல் மாடல் SHVS எனும் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் AMT கியர் பாக்ஸுடனும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஹூண்டாய் கிராண்ட் i10, ஹோண்டா ஜாஸ், வோல்க்ஸ் வேகன் போலோ மற்றும் போர்டு பிகோ போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.