ரூ 8.54 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா AMT

மாருதி சுசுகி நிறுவனம் AMT டிரான்ஸ்மிஷன் உடன் கூடிய விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலை ரூ 8.54 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த AMT டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் VDI, ZDI மற்றும் ZDI+ என மூன்று வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாருதி நிறுவனம் முதல் முறையாக 90bhp திறன் கொண்ட 1.3 லிட்டர் DDiS 200 டீசல் எஞ்சினில் AMT டிரான்ஸ்மிஷனை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
VDI AMT - Rs 8,54,000
ZDI AMT - Rs 9,31,500
ZDI+ AMT - Rs 10,27,000
ZDi+ Dual tone AMT - Rs 10,49,000

AMT டிரான்ஸ்மிஷனை தவிர கூடுதலாக புதிய குரோம் கிரில், புதிய ஆரஞ்சு நிற வண்ணம், புதிய க்ரே நிற அலாய் மற்றும் கருப்பு நிற உட்புற வடிவமைப்பு ஆகியவை இந்த புதிய மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா AMT மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் இரட்டை காற்றுப்பை, EBD உடன் கூடிய ABS, பின்புற பார்க்கிங் சென்சார், ஹைஸ்பீட் வார்னிங் அலர்ட் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா AMT மாடலிலும் அதே 1.3 லிட்டர் டீசல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 89bhp திறனும் 200Nm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் ஆப்ஷனிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் மஹிந்திரா TUV300 AMT மற்றும் டாடா நெக்ஸன் AMT போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.