மாருதி சுசுகி - வேகன் R ஆட்டோமேடிக் மாடல் 4.76 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது.

மாருதி சுசுகி செளிரியோ மற்றும் அல்டோ K10 ஆட்டோமேடிக் மாடல்களின் வெற்றியை தொடர்ந்து பண்டிகை காலத்தில்  வேகன் R ஆட்டோமேடிக் மாடலை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் 5 வேக ஆட்டோ கியர் சிப்ட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடல்  3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1 லிட்டர்  K-சீரீஸ்  பெட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது. இது 998cc கொள்ளளவு கொண்டது. மேலும் இந்த என்ஜின்  68bhp திறனும்  90Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ, Air conditioner , மடக்ககூடிய பின்புற இருக்கை, பின்புற ஸெல்ப், எலெக்ட்ரிகல் பக்கவாட்டு கண்ணாடிகள் , டில்ட் ஸ்டீரிங் மற்றும் இரவு பகலில் பின்புறம் பார்க்க உதவும் கண்ணாடி  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும்.

இது 3599 மில்லி மீட்டர்  நீலமும்  1495 மில்லி மீட்டர் அகலமும் 1700 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 165  மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.