நாளை வெளியிடப்படும் மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV  மாடலை நாளை வெளியிடுகிறது மாருதி சுசுகி நிறுவனம். இந்த மாடல் தொடர்பான அணைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக நாளை தெரிந்துவிடும்.  இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  நீண்ட நாட்களுக்கு முன்பே இதன் கான்செப்ட் மாடல் வெளியிடப்பட்டது. இந்த மாடல் போர்ட் இகோ ஸ்போர்ட் மற்றும் மகிந்திரா TUV 300 மாடல்களுக்கு  போட்டியாக இருக்கும்

இந்த மாடல் ஒரு முழுமையான SUV போன்ற தோற்றத்தை தருகிறது.  புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த மாடல் டீசல் என்ஜினில்  மட்டும்  கிடைக்கும். பிறகு பெட்ரோல் என்ஜின் மாடல் வெளியிடப்படும். 

இதில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 89bhp திறனும்  200Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. வேரியன்ட் வாரியாக விலை விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான தொழில்நுட்ப விவரங்களை நாளை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.