டெல்லி வாகன கண்காட்சியில் 7 இருக்கை கொண்ட வேகன் R மாடலை வெளியிடும் மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் டெல்லி வாகன கண்காட்சியில்  7 இருக்கை கொண்ட வேகன் R மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ப்ரீஸா காம்பேக்ட் SUV , இக்னிஸ், க்ராண்ட் விடார போன்ற மாடல்களையும் காட்சிக்கு வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் 2013 ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் 1.0 லிட்டர் அல்லது 1.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸில் கிடைக்கும். 

மாருதி சுசுகி நிறுவனம் மும்மரமாக டெல்லி வாகன கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. இந்த மாடல் ரூ. 4 முதல் 7 லட்சம் வரை விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.