நெக்ஸா வாயிலாக 1 லட்சம் கார்களை விற்றுள்ளது மாருதி

கடந்த வருடம் மாருதி சுசூகி நிறுவனம் தனது பிரீமியம் கார்களுக்கென நெக்ஸா எனும் பிரத்தியேக ஷோ ரூம்களை தொடங்கியது. தற்போது ஒரு வருடம் ஆன நிலையில் இதுவரை சுமார் ஒரு லட்சம் கார்களை மாருதி சுசூகி நிறுவனம் நெக்ஸா ஷோரூம்  வாயிலாக விற்றுள்ளது. S- கிராஸ் மற்றும் பலேனோ கார்கள் மட்டுமே இந்த நெக்ஸா ஷோரூம்  வாயிலாக விற்கப்படுகிறது. இதுவரை 28,795 யூனிட்டுகள் S- கிராஸ் காரையும் 71,230 யூனிட்டுகள் பலேனோ காரையும் விற்றுள்ளது மாருதி சுசூகி நிறுவனம்.

தொடக்கத்தில் 40 நெக்ஸா ஷோ ரூம்களை தொடங்கிய மாருதி நிறுவனம் தற்போது 150 வரை விரிவுபடுத்தியுள்ளது. இது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 250 வரி விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2020 ஆம் ஆண்டுக்குள் 15 சாதவீத விற்பனை நெக்ஸா வாயிலாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மாற்றும் புதுவித அனுபவத்தை இந்த நெக்ஸா ஷோரூமை வாயிலாக வழங்கப்படும் எனவும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.